சென்னிமலை முருகன் கோவில் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பாதிரியார் கைது

சென்னிமலை முருகன் கோவில் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பாதிரியார் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-10-20 22:45 GMT

சென்னிமலை முருகன் கோவில் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.

அவதூறு பேச்சு

சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற பகுதியை சேர்ந்த அர்ஜுனன் என்கிற ஜான் பீட்டர் என்பவரின் வீட்டில் பிராா்த்தனை நடைபெற்றது.

இதற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஜான்பீட்டரும் தாக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சென்னிமலையில் கிறிஸ்தவ முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்துவ முன்னணி அமைப்பின் மாநில தலைவர் சரவணன் கலந்து கொண்டு, சென்னிமலை முருகன் கோவில் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

கைது

இதுகுறித்து இந்து முன்னணியின் நிர்வாகி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் மாநில தலைவரான வக்கீல் சரவணன் மற்றும் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த பாதிரியார் ஸ்டீபன் (வயது 40) ஆகிய 2 பேர் மீதும் மதத்தை அவமதித்தல், மத கலவரத்தை தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வக்கீல் சரவணனை கடந்த 3 நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அம்மாபேட்டையில் பாதிரியார் ஸ்டீபனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்