பன்றிகளை திருட முயன்ற சென்னை வாலிபர் கைது
திண்டிவனம் பகுதியில் பன்றிகளை திருட முயன்ற சென்னை வாலிபர் கைது
திண்டிவனம்
திண்டிவனம் கிடங்கல்- 1, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சின்னையன் மகன் அப்பு(வயது 35). இவர் அந்த பகுதியில் பன்றிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பட்டியில் அடைத்து போடப்பட்ட 5 பன்றிகளை மர்ம நபர் ஒருவர் பிடித்து வாய் மற்றும் கால்களை கட்டிக் கொண்டிருந்தார். இந்த சத்தம் கேட்டு எழுந்து வந்த அப்பு பன்றிகளை திருடிச்செல்ல முயன்ற மர்ம நபரை பிடித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் சென்னை, வீராபுரம், கன்னிமார் நகர் பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் ஏழுமலை(29) என்பதும், பன்றிகளை திருடிச்செல்ல முயன்றதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.