சென்னை: மின்சார ரெயிலில் பெண் போலீசுக்கு கத்தி குத்து - அதிர்ச்சி சம்பவம்
மின்சார ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை,
சென்னை, ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் போலீஸ் ஆசிர்வா. இவர் நேற்று இரவு 9 மணி அளவில் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அவர் மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் பாதுகாப்பில் இருந்தார்.
அப்போது ரெயில் புறப்படும் போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் பெண்கள் பெட்டியில் ஏற முயன்றுள்ளார். அப்போது போலீஸ் ஆசிர்வா அவரை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த நபர் மறைத்து வைத்திருந்ந்த கத்தியை எடுத்து பெண் போலீசின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்தி தப்பி ஓடி விட்டார்.
பயணிகள் அளித்த தகவலின் பேரில் பெண் போலீஸ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.