கிணற்றில் மூழ்கி சென்னை வாலிபர் பலி
கடையநல்லூர் அருகே கிணற்றில் மூழ்கி சென்னை வாலிபர் பலியானார்.
கடையநல்லூர்:
சென்னை வடபழனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் மகன் ரவி (வயது 35). இவர் தனது நண்பரான தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பாலமார்த்தாண்டபுரம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரது வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.
சம்பவத்தன்று அருகே சங்குபுரம் கிராமத்தில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக ரவி, முருகேசன், அவரது நண்பர்கள் சென்றனர். கிணற்றில் குளித்துக் கொண்டு இருக்கும் போது, ரவி திடீரென்று தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும், முடியவில்லை.
இதுகுறித்து உடனடியாக இலத்தூர் போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் இருந்த தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றி ரவி உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.