கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வெற்றி

பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வெற்றி சுழற்கோப்பையை ராஜகுமார் எம்.எல்.ஏ., வழங்கினார்

Update: 2023-08-28 18:45 GMT

மயிலாடுதுறை ராஜன் தோட்டம் இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் சார்பில் 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கலைஞர் சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் 2 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் சென்னை, மயிலாடுதுறை உள்பட 8 மண்டல மாவட்ட அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் மயிலாடுதுறை அணிகள் மோதின. இதில் சென்னை அணி வெற்றி பெற்று கலைஞர் சுழற்கோப்பையை வென்றது. இதற்கான பரிசளிப்பு விழா தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்க மாநிலத் தலைவரும், காவல்துறை முன்னாள் ஐ.ஜி.யுமான சொக்கலிங்கம் தலைமையில் நடந்தது. அகில இந்திய பொதுச் செயலாளர் சுனில் வரவேற்றார். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு வெற்றி பெற்ற சென்னை அணிக்கு கலைஞர் சுழற்கோப்பையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் கழகத்தினுடைய நிர்வாகி ஜெகவீரபாண்டியன், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகள் கிரிக்கெட் சங்க தலைவர் அப்பர்சுந்தரம், இந்திய விளையாட்டு ஆணைய இயக்குனர் மணிவாசகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்