குளுகுளு குளிர்...! ஊட்டியாக மாறிய சென்னை...! - சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஸ்டேக்

சென்னையில் மாலை முதல் குளிர் அதிகரித்துள்ளது.

Update: 2022-11-21 13:07 GMT

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தரக்காற்று சில நேரங்களில் மணிக்கு 20-25 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 30 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையில் மாலை முதல் குளிர் அதிகரித்துள்ளது. அவ்வப்போது லேசான மழையுடன் அதிக அளவிலான குளிர் நிலவி வருகிறது. இதனால், சென்னை முழுவதும் மாலை முதல் ஊட்டி போல் குளுகுளுவென குளிர்ந்த நிலையில் உள்ளது. இதனால், சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் குளிர் அதிகரித்துள்ளதால் டுவிட்டர் உள்பட சமூகவலைதளத்தில் 'ChennaiSnow' என்ற ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்