சென்னையில் கடந்த 72 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக 8.4 செ.மீ கனமழை பதிவு...!

சென்னையில் கடந்த 72 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இன்று 8.4 செ.மீ கனமழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-11-01 08:46 GMT

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் எதிரொலியால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் இன்று கனமழை பெய்ய வாய்ப்புகள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

அடுத்த 3 நாட்களில் தமிழ்நாடு, காரைக்கால், புதுவை பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்சமாக செங்குன்றத்தில் 13 செ.மீ., பெரம்பூரில் 12 செ.மீ. மழைப்பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகி உள்ள மழை அளவு விவரம் வருமாறு:-

பெரம்பூர் -12 செ.மீ

செங்குன்றம் 13 செ.மீ.

சென்னை கலெக்டர் அலுவலகம்-10 செ.மீ

தண்டையார்பேட்டை - 9.8 செ.மீ

அயனாவரம் -9.4 செ.மீ

நுங்கம்பாக்கம்- 8 செ.மீ

டிஜிபி அலுவலகம்- 7.2 செ.மீ

எம்ஜிஆர் நகர்- 6.6 செ.மீ

அம்பத்தூர்- 5.2 செ.மீ

அண்ணா பல்கலைக்கழகம் - 4.6 செ.மீ

ஆலந்தூர்- 3 செ.மீ

சோழிங்கநல்லூர் - 4 செ.மீ

72 ஆண்டுகளில் நுங்கம்பாக்கம் பகுதியில் கனமழை பதிவாவது ( 8 செ.மீ ) இது மூன்றாவது முறை ஆகும். கடந்த 30 ஆண்டுகலில் பதிவான முதல் கனமழை இது என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்