சென்னை கலாஷேத்ரா விவகாரம்: தமிழக மகளிர் ஆணையம் இன்று விசாரணை

சென்னை கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக தமிழக மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது.

Update: 2023-03-31 03:51 GMT

சென்னை,

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மாணவிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்கள் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய கலாசார அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளனர். பாலியல் தொல்லை அளித்துவரும் பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டம் நடைபெறும் எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா மாணவிகளிடம் தமிழக மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளை சந்தித்து தமிழக மகளிர் ஆணைய தலைவர் குமரி விசாரணை நடத்த உள்ளார். காலை 10 மணி அளவில் மாணவிகளின் புகார் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்