சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியருக்கு சர்வதேச விருது

தண்ணீரை சுத்தப்படுத்துவதில் தொழில்நுட்பம்: சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியருக்கு சர்வதேச விருது.

Update: 2023-07-17 18:49 GMT

சென்னை,

எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிகளில் சர்வதேச அளவில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில் மிக உயரிய 'இ.என்.ஐ.' விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை ஐ.ஐ.டி. வேதியியல் துறை பேராசிரியர் தலப்பில் பிரதீப் 'இ.என்.ஐ.' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

நவீன மூலப்பொருட்களை பயன்படுத்தி தண்ணீரை சுத்தப்படுத்தும் அவருடைய பணியை அங்கீகரிக்கும் வகையில் தலப்பில் பிரதீப்புக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இவர் தண்ணீரில் இருந்து நச்சு பொருட்களை வெளியேற்றும் நவீன நிலையான மூலப்பொருட்களை கண்டுபிடித்திருக்கிறார். அவர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் நிலையானது மட்டுமின்றி குறைவான செலவு கொண்டதாகும். குடிநீர் பிரச்சினைக்கான தீர்வாக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தால் இந்தியாவில் 13 லட்சம் பேர் தினந்தோறும் பயன் அடைந்து வருகிறார்கள். தலப்பில் பிரதீப்புக்கு இத்தாலி பிரதமர் விரைவில் விருதினை வழங்க உள்ளார்.

இதுகுறித்து தலப்பில் பிரதீப் கூறும்போது, "இதனை சாத்தியமாக்குவதற்கு உறுதுணையாக இருந்த மாணவர்கள், பங்குதாரர்கள், உடன் பணியாற்றுபவர்கள் என அனைவருக்கும் நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். நாடும், எனது கல்வி நிறுவனமும் தான் எனக்கு அனைத்தையும் கொடுத்தது" என்றார். தலப்பில் பிரதீப் முன்னதாக பத்மஸ்ரீ, தண்ணீருக்காக பிரின்ஸ் சுல்தான் பின் அப்துலாசிஸ் சர்வதேச விருது, நிக்கே ஏசியா விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்