சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் இன்று பதவியேற்றார்.

Update: 2024-09-27 05:00 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர். மகாதேவன் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, அந்த பதவி காலியானது. இதையடுத்து அந்த பதவிக்கு மும்பை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்தது.

தொடர்ந்து கொலீஜியம் அளித்த பரிந்துரைப்படி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ஸ்ரீராமை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 21-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் வரும் இன்று பதவியேற்றார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கே.ஆர். ஸ்ரீராமுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்