சென்னை தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று மாறிவிட்டதால் இதை 'சென்னை தினம்' என்று அழைக்கிறார்கள்.
சென்னை,
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி 'சென்னை தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 384-வது சென்னை தினமாகும். இதையொட்டி தமிழக அரசு சார்பிலும், சென்னை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், 'சென்னை தினம்' இன்று கொண்டாடப்படுவதையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "மெட்ராஸ் தினத்தில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்! வியப்பூட்டும் கலாசார பன்முகத்தன்மை, ஆழமாக வேரூன்றிய ஆன்மிகம், அறிவார்ந்த வலிமை ஆகியவற்றின் இந்த தொடர்ச்சியை அதே ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேலும் முன்னெடுத்து கொண்டாடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.