சென்னை மாநகராட்சி கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வரபிரசாத் காலமானார்

சென்னை 165-வது வார்டு கவுன்சிலரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

Update: 2022-11-24 03:06 GMT

சென்னை,

சென்னை 165-வது வார்டு கவுன்சிலரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

நாஞ்சில் ஈஸ்வரபிரசாத்உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

நாஞ்சில் ஈஸ்வரபிரசாத் காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்தார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்