செம்முனிஸ்வரர் கோவில் உண்டியலை திருடியவர் கைது

செம்முனிஸ்வரர் கோவில் உண்டியலை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-03 19:18 GMT

அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டியில் கல்லூர் செம்முனிஸ்வரர் கோவில் மற்றும் நல்லகுறிச்சி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர் பணத்தை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொத்தமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த பாண்டியன் (வயது 55) என்பவர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்