ரெயில் முன் பாய்ந்து சமையல் கலைஞர் தற்கொலை

திருமணம் ஆகாத விரக்தியில் ரெயில் முன் பாய்ந்து சமையல் கலைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-14 18:45 GMT

மயிலாடுதுறை ரெயில்வே ஜங்ஷனில் மயிலாடுதுறையிலிருந்து கோயமுத்தூர் செல்லும் ஜனசதாப்தி தினசரி ரெயில் நேற்று மதியம் 2:55 மணிக்கு புறப்பட்டு உள்ளது. அப்போது 4-வது நடைமேடையில் இருந்து புறப்பட்ட ரெயிலின் முன்பு திடீரென ஒருவர் பாய்ந்துள்ளார். ரெயிலின் முன்பு தண்டவாளத்தில் விழுந்த நபர் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனார். தகவலறிந்த மயிலாடுதுறை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ரெயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர், மயிலாடுதுறை பனந்தோப்பு தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஆறுமுகம் (வயது 40) என்பதும், சமையல் கலைஞரான இவர், தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற விரக்தில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்