தாளவாடி அருேக சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலி
தாளவாடி அருேக சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலி
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், ஜீர்கள்ளி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை அடித்து கொன்று வருவது ெதாடர்கதையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவம் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட கிராமத்தில் நடந்து உள்ளது.
தாளவாடியை அடுத்த அருள்வாடியை சேர்ந்தவர் சித்தராஜ் (வயது 34). விவசாயி. இவர் 6 மாடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை அருகில் உள்ள மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு மாடுகளை கட்டி இருந்தார். மாலையில் சென்று பார்த்தபோது கன்றுக்குட்டி ஒன்று கழுத்து பகுதியில் கடிபட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏதோ விலங்கு அடித்துக்கொன்று உள்ளது என எண்ணிய அவர் உடனே இதுபற்றி ஜீர்கள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று இறந்து கிடந்த கன்றுக்குட்டியை பார்வையிட்டனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த கால் தடத்தையும் ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தையின் கால் தடம் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். எனவே கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்துக்கொன்று உள்ளதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்துக்கொன்ற சம்பவம் அங்குள்ள கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.