கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
கோவையில் தங்கும் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் தங்கும் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
குடும்ப பிரச்சினை
நாகை மாவட்டம் வடபாதி சோழம்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி கீர்த்திகா (வயது 27). இவர்க ளுக்கு ஒரு குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் கிருத்திகா கடந்த 2 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து நாகப்பட்டினத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவருக்கு சிவகங்கை மாவட்டம் தேவக் கோட்டை அருகே நாச்சாங்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணனுக்கு திருமணம் ஆகவில்லை.
தனிமையில் உல்லாசம்
இதனால் கீர்த்திகா, கிருஷ்ணன் ஆகியோர் அடிக்கடி செல்போ னிலும், நேரில் சந்தித்தும் பேசி வந்தனர். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் கீர்த்திகாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் கிருத்திகாவை கண்டித்தனர். இந்த நிலையில் கள்ளக்காதல் ஜோடி கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி கோவை வந்தனர்.
விஷம் குடித்தனர்
அவர்கள் கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கணவன்- மனைவி என்று கூறி அறை எடுத்து தங்கி னர். கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால், கிருத்திகா வாழ்க்கையில் விரக்தி அடைந்ததாக தெரிகிறது.
இதனால் அவர்கள் 2 பேரும் தற்கொலை செய்ய முடிவு செய்த னர். அதன்படி 2 பேரும் குளிர்பானத்தில் எலி மருந்தை (விஷம்) கலந்து குடித்து மயங்கி கிடந்தனர். இந்த நிலையில் விடுதியில் 5 நாட்களாக தங்கியிருந்த அவர்கள் வாடகை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் விடுதி ஊழியர் ஒருவர் வாடகை பணம் கேட்பதற்காக அவர்கள் தங்கி இருந்த அறைக்கு நேற்று முன்தினம் சென்றார்.
தற்கொலை
அப்போது அறையில் தங்கி இருந்த கள்ளக்காதல் ஜோடி, தாங்கள் விஷம் குடித்து விட்டதாக கூறினர். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் வந்து பார்த்த போது கீர்த்திகா உயிரிழந்தது தெரியவந்தது. கிருஷ்ணன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். உடனே அவரை போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த கீர்த்திகா வின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதற்கிடையே உயிருக்கு போராடிய கிருஷ்ணனுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணை
இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக் காதல் ேஜாடி தற்கொலை கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளக்காதல் ஜோடி இறந்தது குறித்து அவர்களின் உறவினர்க ளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தங்கும் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.