விழுப்புரம் சாலாமேடுசவுடேஸ்வரியம்மன் கோவிலில் கத்தி போடுதல் உற்சவம்

விழுப்புரம் சாலாமேடு சவுடேஸ்வரியம்மன் கோவிலில் கத்தி போடுதல் உற்சவம் நடைபெற்றது.

Update: 2023-05-17 18:45 GMT


விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ராமலிங்க சவுடேஸ்வரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காப்பு கட்டுதலும் நடந்தது.

பின்னர் என்.ஜி.ஜி.ஓ. நகர் பாலமுருகன் கோவிலில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், தேவாங்கர் குலத்தை சேர்ந்த பக்தர்கள் கத்தி போடுதல் உற்சவமும் நடந்தது. இதையொட்டி அவர்கள், நெஞ்சில் வாள் தாங்கி சக்தியை கோவிலுக்கு ஊர்வலமாக அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து, மாலை 3 மணிக்கு ஜோதி மாவு கட்டுதல், கோவிலில் உள்பிரகாரம் வலம் வருதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்