பரிதியப்பர் கோவில் தேரோட்டம்
கீழ்வேங்கைநாடு பரிதியப்பர் கோவில் தேரோட்டம் நடந்தது.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு வட்டம் கீழ்வேங்கைநாடு பரிதியப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சாமி தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.