பள்ளக்கொள்ளை கிராமத்தில் காளியம்மன் கோவில் தேரோட்டம்

பள்ளக்கொள்ளை கிராமத்தில் காளியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2023-06-03 18:46 GMT

தர்மபுரி அருகே செட்டிக்கரை அடுத்த பள்ளக்கொள்ளை கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், மாவிளக்கு எடுக்கும் விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் தேரோட்டம் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காளியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பள்ளக்கொள்ளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பந்தகாசி நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்