கனககிரி ஈஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கனககிரி ஈஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
சேத்துப்பட்டு
தேவிகாபுரத்தில் உள்ள கனககிரி ஈஸ்வரர் பெரியநாயகி தாயார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
முதல் தேரில் கனககிரி ஈஸ்வரர், பெரியநாயகி தாயாரும், 2-வது தேரில் பெயரிநாயகி தாயாா் மட்டும் எழுந்தருளினர்.
பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை செய்திருந்தது.