தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் தேரோட்டம்

ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-01 18:35 GMT

ராஜபாளையம். 

ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. ஆகாய தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக தேரோட்டம் திருவிழா 10 தினங்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.

தேரோட்டம்

கோவில் பரம்பரை அறங்காவலர் துரை ரத்னகுமார் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து தளவாய்புரம், சேத்தூர், முகவூர், ராஜபாளையம், கோவிலூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுவாமி மற்றும் அம்மன் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.2 தேர்களும் 4 ரத வீதிகளையும் சுற்றி நிலைக்கு திரும்பியது. தேர்கள் நின்றிருந்த நிலைப்பகுதி மற்றும் தேர் சென்ற பகுதிகளில் பக்தர்கள் விழுந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை சேத்தூர் போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்