பாறை கோவில் திருவிழாவில் தேர் பவனி

பர்கூர் அருகே எலத்தகிரியில் பாறை கோவில் திருவிழாவில் தேர் பவனி நடந்தது.

Update: 2023-02-13 18:45 GMT

பர்கூர்

பர்கூர் அருகே உள்ள எலத்தகிரி கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாறை கோவில் தேர்த்திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பாறைக்கோவிலில் திருப்பலி, ஆராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் திருத்தேர் பவனி நடந்தது. முன்னதாக தேரை பாதிரியார் வின்சென்ட் சேவியர் மந்தரித்து தொடங்கிவைத்தார். அலங்கரிக்கப்பட்ட 2 தேர்களில் மிக்கேல் சம்மனசு, லூர்து மாதா, புனித சூசையப்பர், குழந்தை இயேசு, தேவமாதா ஆகியோர் பவனியாக வீதி உலா சென்றனர். இதில் செல்லகுமார் எம்.பி. கலந்துக்கொண்டார். இந்த தேர்திருவிழாவிற்கு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்