பரமக்குடி,
பரமக்குடி முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. அதையொட்டி ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடனாக அக்னி சட்டி, ஆயிரம்கண் பானை, கரும்பாலை தொட்டி ஆகியவற்றை எடுத்து வந்தனர். மேலும் நீளமான வேல் குத்தியும் பக்தி பரவசமுடன் ஆடி வந்தனர். இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்தாலம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். வான வேடிக்கைகள் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். பின்பு அந்த தேர் கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. அப்போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என பக்தி பரவசத்துடன் கோசங்கள் எழுப்பி அம்மனை வழிபட்டனர்.