காளியம்மன் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்

அதியமான்கோட்டையில் காளியம்மன் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது.

Update: 2023-04-03 20:09 GMT

நல்லம்பள்ளி

நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி கூழ் ஊற்றி, அம்மன் சக்தி கரகம் வலம் வருதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 29-ந் தேதி கும்ப பூஜையும், 31-ந் தேதி கோ பூஜை மற்றும் விநாயகர் தேர் இழுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. கடந்த 1-ந் தேதி காளியம்மன் சிறிய தேர் இழுத்தல் நிகழ்ச்சியும், 3-ந் தேதியான நேற்று அலங்கரிக்கப்பட்ட காளியம்மன் மகாரத தேரோட்ட நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடந்தது. இதில் அதியமான்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காளியம்மன் பெரியதேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை), பெரியதேர் நிலை அடைதலும் நடக்கிறது. 10-ந் தேதி குதிரை வாகனத்தில் பந்தகாசி வலம் வருதல் நிகழ்ச்சியும் மற்றும் 12-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், காளியம்மன் சிலை ஊர்வலத்துடன் கோவில் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்