கழுகுமலையில் சாரல் மழை

கழுகுமலையில் சாரல் மழை பெய்தது.

Update: 2023-07-05 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் இளநீர், பழரசம், மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை பருகி உடலின் வெப்பத்தை தணித்து வந்தனர். இரவு நேரங்களிலும் புழுக்கம் காரணமாக தூங்க முடியாமல் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் கழுகுமலையில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது இதமான காற்றும் பலமாக வீசி வருகிறது. இதனால் இப்பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் உருவாகி இருப்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்