போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு

தர்மபுரி மாவட்டத்தில் 6 மையங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 7,911 பேர் எழுதினார்கள்.

Update: 2022-06-25 15:06 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் 6 மையங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 7,911 பேர் எழுதினார்கள்.

எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு 6 மையங்களில் நடைபெற்றது. மொத்தம் 7,911 பேர் இந்த எழுத்து தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 1,035 பேர் தேர்வு எழுத வரவில்லை. 6,876 பேர் தேர்வு எழுதினார்கள்.

இந்த எழுத்து தேர்வு 2 கட்டங்களாக நடைபெற்றது, காலை உளவியல் மற்றும் பொது அறிவு தேர்வும், மாலை பொதுத்தமிழ் தேர்வும் நடைபெற்றது. தேர்வு மையத்திற்குள் எவ்வித மின்னணு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் எடுத்துவர அனுமதி மறுக்கப்பட்டது. இந்த தேர்வு பாதுகாப்பு பணிக்காக 700 போலீஸ் அலுவலர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

டி.ஐ.ஜி. ஆய்வு

இதனிடையே இந்த எழுத்து தேர்வு நடைபெற்ற மையங்களில் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேர்வர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்