ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் சப்பர பவனி

ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது.

Update: 2023-09-08 18:42 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் 253-ம் ஆண்டு ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா கொண்டாடப்பட்டது. கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற இந்த ஆலயத் திருவிழாவில் தினமும் திருவிழா, திருப்பலி மறையுறை, மாதா மன்றாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலை திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியை திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி இல்லத்தலைவர் அருட்தந்தை மரிவளன் தலைமையில் அருட்தந்தையர்கள் நிறைவேற்றினர்.

அதனைத்தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய அன்னையும், அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் தூய மிக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார் புனித அந்தோணியார் புனித அருளானந்தர் ஆகியோரும் பவனியாக சென்று இறை மக்களுக்கு இறையாசீர் வழங்கினர். அதனைத் தொடர்ந்து நெற்றியில் எண்ணெய் பூசி குணமளிக்கும் வழிபாடு, வாணவேடிக்கை கலை நிகழ்ச்சிகள், நடைபெற்றது.

நேற்று காலை திருவிழா நன்றி திருப்பலியை ஓரியூர் புனித அருளானந்தர் திருத்தல கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை ஆல்பர்ட் முத்துமாலை மற்றும் அருட் தந்தையர்கள் நிறைவேற்றினர். மாலையில் கொடி இறக்கம் நடைபெற்றது. இதில் ஓரியூர் புனித அருளானந்தர் திருத்தல உதவி பங்கு தந்தைகள் ரபேல் அலெக்ஸாண்டர், பிரான்சிஸ் சேல்ஸ், அருளக இயக்குனர் தேன் அமிர்தராஜ், மற்றும் சுற்றுவட்டார பங்கு தந்தையர்கள் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர். திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டு நிரேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்