தாம்பரம்-நாகர்கோவில் இடையே ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தாம்பரம்-நாகர்கோவில் இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2022-10-15 18:49 GMT

சென்னை,

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*தாம்பரம்-நாகர்கோவில் (வண்டி எண்:20691) இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (17-ந் தேதி) திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக நாகர்கோவில்-தாம்பரம் இடையே மதியம் 3.50 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 18-ந் தேதி நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திண்டுக்கல்லில் இருந்து இரவு 9.05 மணிக்கு இயக்கப்படும்.

* செங்கோட்டை-மதுரை (06662) இடையே காலை 7 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 18-ந் தேதி விருதுநகர் மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* மதுரை-செங்கோட்டை (06665) இடையே மாலை 5.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 18-ந் தேதி மதுரை மற்றும் விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் விருதுநகரில் இருந்து மாலை 6.10 மணிக்கு இயக்கப்படும்.

* நாகர்கோவில்-கோவை (16321) இடையே காலை 7.35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 18-ந் தேதி நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கமாக கோவை-நாகர்கோவில் இடையே காலை 8 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 18-ந் தேதி திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்