சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான புறநகர் ரெயில் சேவையில் நாளை மாற்றம்.!

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான புறநகர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-10-30 13:07 GMT

சென்னை,

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரெயில்கள் நாளை காலை 10.18 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் புறநகர் ரெயில்கள் காலை 9.08 மணி முதல் பிற்பகல் 3.20 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திற்கு முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2.20 மணி வரையில் புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதேபோல், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணி, திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்படும் ரெயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் பயணிகள் நலன் கருதி, சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு ரெயில் நிலையத்திற்கு காலை 11.51, பகல் 12.35, மதியம் 1.15, 1.35, 1.55, பிற்பகல் 2.45, 3.10 மற்றும் 3.30 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

 

Tags:    

மேலும் செய்திகள்