பொங்கல் பண்டிகை நேரத்தில் தண்டவாள இணைப்பு பணிக்காக தென் மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம் - பயணிகள் கடும் எதிர்ப்பு

மதுரை ரெயில்வே கோட்டத்தில், தண்டவாள இணைப்பு பணிக்காக தென் மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Update: 2023-01-07 20:35 GMT


மதுரை ரெயில்வே கோட்டத்தில், தண்டவாள இணைப்பு பணிக்காக தென் மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அகலப்பாதை இணைப்பு

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட தூத்துக்குடி, நெல்லை-மதுரை இடையே இரட்டை அகலப்பாதை பணிகள் முடிந்துள்ளது. இதில் திருமங்கலம்-மதுரை இடையேயான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்கிடையே, கோவில்பட்டி-கடம்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை அகலப்பாதையை இணைக்கும் பணிகள் நடக்க உள்ளது. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராமேசுவரம்-கன்னியாகுமரி வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.2262122622) நாளை (திங்கட்கிழமை), கன்னியாகுமரி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் 10-ந்தேதி, திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22627/22628) 11-ந் தேதியும் இருமார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண். 16731/16732) இன்று(ஞாயிற்றுக்கிழமை), நாளை, 11-ந் தேதிகளில் விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும். வருகிற 10-ந் தேதி மதுரை வரை மட்டும் இயக்கப்படும்.

ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16845) இன்று, நாளை, 10-ந் தேதிகளிலும், நெல்லை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16846) நாளை, 10,11-ந் தேதிகளிலும் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.

தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20691) இன்று, நாளை, 10-ந் தேதிகளிலும், நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரெயில் (வ.எண்.20692) நாளை, 10,11-ந் தேதிகளிலும் திருச்சி-நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

தென் மாவட்ட ரெயில்கள் ரத்து

கோவை-நாகர்கோவில் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16322/16321) நாளை, 10,11-ந் தேதிகளில் இரு மார்க்கங்களிலும் ஈரோடு-நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16730) நாளை, 10-ந் தேதிகளிலும், மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16731) 10,11-ந் தேதிகளில் நெல்லை-மதுரை வரை மட்டும் இயக்கப்படும்.

சென்னை-திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16105) நாளை 10-ந் தேதிகளிலும், திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16106) 10,11-ந் தேதிகளிலும் திருச்சி-திருச்செந்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16236) 10-ந் தேதியும், தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16236) 11-ந் தேதியும் விருதுநகர்-தூத்துக்குடி இடையே ரத்து செய்யப்படுகிறது.

மாற்றுப்பாதை

சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127.16128) 10-ந் தேதி இருமார்க்கங்களிலும் நெல்லை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.17235) 10-ந் தேதி விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக மாற்றுப்பாதையில் நெல்லை சென்று அங்கிருந்து நாகர்கோவில் செல்லும்.

இதுதவிர, திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை-தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியன வருகிற 10-ந் தேதி காலதாமதமாக இயக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்