18 ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்
18 ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணியின் காரணமாக 18 ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி அரக்கோணம்-சேலம் பயணிகள் ரெயில் (வண்டி என் 16087) நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் அரக்கோணம் முதல் ஜோலார்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படும். இதனால் அந்த ரெயில் ஜோலாபேட்டை-சேலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் மறுமார்க்கத்தில் இருந்து செல்லும் சேலம் -அரக்கோணம் பயணிகள் ரெயில் (வண்டி எண் 16088) நாளை மற்றும் நாளை மறுநாள் சேலம்-ஜோலார்பேட்டை வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் அந்த ரெயில் ஜோலார்பேட்டை முதல் அரக்கோணம் வரை இயக்கப்படும். இந்த ரெயில்கள் உள்பட சேலம் வழியாக செல்லும் மொத்தம் 18 ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.