பாலக்காடு-திருச்சி ரெயில் சேவையில் நாளை மாற்றம்
பாலக்காடு-திருச்சி ரெயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்படுகிறது.
திருப்பூர்,
பாலக்காடு-திருச்சி ரெயில் நாளை (சனிக்கிழமை) திருச்சி கோட்டை முதல் திருச்சி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திருச்சி கோட்டையில் இருந்து இயக்கப்படும். திருச்சி-பாலக்காடு ரெயில் நாளை திருச்சியில் இருந்து திருச்சி கோட்டை வரை ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரெயில் திருச்சி கோட்டை முதல் பாலக்காடு டவுனுக்கு இயக்கப்படும். மயிலாடுதுறை-கோவை ஜன்சதாப்தி ரெயில் நாளை மயிலாடுதுறை-திருச்சிக்கு இடையே 50 நிமிடம் தாமதமாக செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.