சந்திரயான் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் சாமி தரிசனம்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சந்திரயான் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் சாமி தரிசனம் செய்தார்.
திருவெண்காடு;
திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான் திட்ட இயக்குனருமான வீரமுத்துவேல் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். சுவேதாரண்யேஸ்வரர் சன்னதி, அகோர மூர்த்தி, ஸ்வேத மகாகாளி, புதன் மற்றும் பிரம்ம வித்யாம்பிகை சன்னதிகளில் அர்ச்சனை செய்து வழிபட்ட சந்திரயான் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் குடும்பத்தினருக்கு நிர்வாக அதிகாரி முருகன், அர்ச்சகர் வினோத் சிவாச்சாரியார் ஆகியோர் பிரசாதங்களை வழங்கினர்.