தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
இதனிடையே, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.