தமிழகத்தில் சில இடங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் சில இடங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-04-30 08:13 GMT

சென்னை,

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 3 மணி நேரத்தில்நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதில் சில பகுதிகளில் கனமழையும் பெய்யக் கூடும்.

நாளை திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், வேலூர் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும். இதேபோல் தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தென்காசி, விருதுநகர், ஈரோடு, நாமக்கல், கரூர், மற்றும் மதுரை மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும்"எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்