தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2022-07-07 03:18 GMT

சென்னை,

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை கருதி வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்