தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதாவது, கடலூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நீலகிரி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.