தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த வாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன மழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்தது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரத்தில் நாளை முதல் 14-ந்தேதி வரைமிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.