கோவையில் பலத்த மழைக்கு வாய்ப்பு
கோவையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கோவை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் தெரிவித்து உள்ளார்.
கோவை
கோவையில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கோவை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் தெரிவித்து உள்ளார்.
மழை
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
கோவையில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பகல் 11 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது.
கோவை காந்திபுரம், உக்கடம், ராமநாதபுரம், துடியலூர், சிங்கா நல்லூர் உள்ளிட்ட இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் குடைபிடித்தபடி சென்றனர்.
சாலைக ளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட் டனர்.
நேற்று மாலை வரை தொடர்ந்து மழை நீடித்தது.
இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் விட்டதும் மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி தங்களது வீடுகளுக்கு சென்றனர். குனிய முத்தூர், போத்தனூர், சிங்காநல்லூர், வடவள்ளி உள்பட பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளானார்கள்.
இது போல் கணபதி, மணியகாரம்பாளையம், உடையாம்பாளை யம், சின்னவேடம்பட்டி, சுப்பநாயக்கன்புதூர், அஞ்சுகம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 9 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இரவு வரை விடாமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சகதியான சாலைகள்
மாநகராட்சி பகுதியில் தடாகம் ரோடு, போத்தனூர், குறிச்சி உள்ளிட்ட இடங்களில் குடிநீர் குழாய்கள் பதிக்க சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன. இந்த சாலைகள் மூடப்பட்டு முறையாக சீரமைக்கப்படாததால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சிலர் சகதியில் சிக்கி வழுக்கி விழுந்து காயமடைந்தனர்.
இது குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறுகையில், கோவையில் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
இதுவரை 116 மில்லி மீட்டர் வடகிழக்கு பருவமழை பெய்து உள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கோவையில் இன்றும் (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்றார்.
மழையளவு
நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கோவையில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
மேட்டுப்பாளையம்-2, சின்னக்கல்லாறு-3, ஆழியாறு-1, சூலூர்-2, பொள்ளாச்சி-4, கோவை தெற்கு-2, விமான நிலையம்-2, தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்-2, பில்லூர் அணை-16, தொண்டாமுத்தூர்- 6, சிறுவாணி மலை அடிவாரம் -6, மதுக்கரை-1, போத்தனூர்-2, மாக்கினாம்பட்டி -6, கிணத்துக்கடவு -4, அன்னூர் -3