தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-01 07:53 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதியின் மேல் அடுக்கில் நிலவக்கூடிய காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்