மழையால் சம்பா அறுவடை பணி பாதிப்பு

வேதாரண்யம் பகுதியில் மழையால் சம்பா அறுவடை பணி பாதிக்கப்பட்டதால் விவாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-01-30 18:45 GMT

வேதாரண்யம்:

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததால் வேதாரண்யம் மற்றும் அகஸ்தியன்பள்ளி, வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாபட்டினம், தலைஞாயிறு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் நேற்று விட்டு விட்டு மழை பெய்தது. வேதாரண்யம் பகுதியில் சம்பா அறுவடை பணி தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நேற்று பெய்த இந்த மழையினால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் அறுவடை செய்யப்பட்ட நெல்லை காய வைக்க முடியாமலும், நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த தொடர் மழையால் நெற்கதிர்கள் முற்றிலும் சாய்ந்து விட்டன. நெற்கதிர்கள் சாய்ந்து விட்டதால் வைக்கோலுக்கு கூட ஆகாது என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்