ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு நாற்காலிகள் வார்டு உறுப்பினர் வழங்கினார்

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு நாற்காலிகளை வார்டு உறுப்பினர் வழங்கினார்.

Update: 2022-07-10 12:13 GMT

நாட்றம்பள்ளி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட அதிபெரமனூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 95 மாணவ -மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ க.தேவராஜி இந்த பள்ளியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளிக்கு நாற்காலிகள் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று நாட்டறம்பள்ளி பேரூராட்சி 14 வது வார்டு உறுப்பினர் குருசேவ் தனது சொந்த செலவில் அந்த பள்ளிக்கு தேவையான நாற்காலிகளை வாங்கி தருவதாக எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தார். அதன்படி பள்ளிக்கு தேவையான நாற்காலிகளை தலைமை ஆசிரியை தேன்மொழியிடம் வார்டு உறுப்பினர் குருசேவ் வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்