ராமேசுவரம் கோவிலில் அவசர கதியில் மெருகேற்றப்படும் வெள்ளித்தேர்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வுக்காக வர உள்ள நிலையில் ராமேசுவரம் கோவிலில் வெள்ளித்தேர் அவசரக் கதியில் மெருகேற்றப்பட்டு வருகிறது.

Update: 2022-10-14 18:10 GMT

ராமேசுவரம், 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வுக்காக வர உள்ள நிலையில் ராமேசுவரம் கோவிலில் வெள்ளித்தேர் அவசரக் கதியில் மெருகேற்றப்பட்டு வருகிறது.

வெள்ளித்தேர்

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தங்க தேர் மற்றும் வெள்ளி தேர் உள்ளது. இதில் வெள்ளித்தேர் மாசி மகாளய சிவராத்திரி திருவிழா மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை அன்றும் பக்தர்கள் மூலம் ரதவீதிகளில் இழுக்கப்படும்.

இதேபோல ராமேசுவரம் கோவிலில் உள்ள மிகவும் பழமையான வெள்ளித்தேர் பல வருடங்களாக சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் பொலிவிழந்து காட்சிஅளித்து வந்தது.

ராமேசுவரம் கோவிலுக்கு ஆய்வுக்காக வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெள்ளி தேரை பார்வையிட்டு உடனடியாக வெள்ளித்தேரை பராமரிப்பு பணிகள் செய்து பாலிஷ் செய்து புதுப்பொலிவு பெற செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். அமைச்சர் உத்தரவிட்டு ஒரு ஆண்டு கடந்தும் வெள்ளி தேர் பராமரிக்கப்படாமல் பாலிஷ் செய்யப்படாமல் காட்சி அளித்து வந்தது.

மெருகேற்றும் பணி

இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் வருகிற 21-ந் தேதி ஆய்வு செய்ய அமைச்சர்வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவசர அவசரமாக ராமேசுவரம் கோவிலில் பொலிவிழந்து காணப்படும் வெள்ளித்தேரை அவசரகதில் பாலிஷ் செய்து மெருகேற்றும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கரூரில் இருந்து வந்து தொழிலாளர்கள் வெள்ளித்தேரை பாலிஷ் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்