தோழியின் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

தோழியின் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிக்கப்பட்டது. மற்றொரு வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-01-13 19:15 GMT

தாலி சங்கிலி பறிப்பு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் சின்னாறு பிள்ளையார் கோவில் எதிர்புறத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்தியபாமா(வயது 38). சத்தியபாமாவின் கணவர் வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இதனால் சத்தியபாமா தனது மகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது தோழியான ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த தனசேகரின் மனைவி சத்யா(31) என்பவர் எறையூரில் உள்ள தோழியை பார்ப்பதற்காக தனது மகனுடன் சத்தியபாமா வீட்டிற்கு வந்து கடந்த 2 நாட்களாக தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு சத்யா வீட்டின் கதவு அருகே தூங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.40 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் சத்யா கழுத்தில் கிடந்த ¾ பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

பரபரப்பு

இதில் சத்யாவுக்கு காயம் ஏற்பட்டது. இதே போல் முன்னதாக எறையூர் சின்னாறு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(63). நேற்று அதிகாலை இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவை திறந்து, அதில் இருந்த 1¾ பவுன் நகை, ரூ.6 ஆயிரத்து 500-ஐ கொள்ளையடித்து சென்றனர். மேற்கண்ட 2 சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்கள் ஒரே கும்பலாக இருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வலைவீசி தேடி வருகின்றனர். மேற்கண்ட சம்பவங்கள் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்