பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
ஓசூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர்:
ஓசூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சங்கிலி பறிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மனைவி யசோதா (வயது 43). சம்பவத்தன்று இரவு இவர் வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்தனர்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த நபர்கள், யசோதா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். அதை தடுக்க முயன்ற யசோதாவிற்கு கையில் காயம் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
வலைவீச்சு
இதுகுறித்து அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்து சென்ற இந்த துணிகர சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.