புகையிலை இல்லாத பள்ளிக்கான சான்றிதழ்

கீழ்மின்னல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புகையிலை இல்லாத பள்ளிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2023-06-14 18:15 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் கீழ்மின்னல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியை இரா.சி.வாசவி தலைமை தாங்கினார். தமிழாசிரியை அ.பூம்பாவை, வரலாறு ஆசிரியை ச.சந்திரிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக புதுப்பாடி ஆரம்ப சுகாதார அலுவலர் பாலாஜி கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மேலும் உலக ரத்த தானம் செய்பவர் தினத்தை முன்னிட்டு ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து கிராம செவிலியர் நேத்ராவதி, இல்லம் தேடி மருத்துவர் கஜலட்சுமி ஆகியோர் விளக்கி கூறினர்.

நிகழ்ச்சியில் புதுப்பாடி ஆரம்ப சுகாதார அலுவலர் பாலாஜி தலைமை ஆசிரியை இரா.சி. வாசவியிடம் "புகையிலை இல்லாத பள்ளி" என்பதற்கான சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்