மீட்புப்பணி வீரருக்கு நற்சான்றிதழ்-போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வழங்கினார்

மீட்புப்பணி வீரருக்கு நற்சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வழங்கினார்.

Update: 2022-05-28 19:38 GMT

நெல்லை:

தூத்துக்குடியை சேர்ந்தவர் மரிய மைக்கேல். மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் பேரிடர் மீட்பு குழு முதன்மை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

இவர் நெல்லை அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் சிக்கிய 6 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்ட, மீட்பு படையினருக்கு ஆலோசனை வழங்கினார். இவரது ஆலோசனை படி குவாரியில் கயிறு மூலம் கீழே இறங்கி மீட்பு பணி மேற்கொள்ள திட்டமிட்டு மீட்புப்பணியினர் உள்ளே சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர். அதில் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பல்வேறு இயற்கை இடையூறுகள் வந்தாலும் களத்தில் கடைசி வரை நிலைத்து நின்று தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் கடும் சிரமத்திற்கிடையே 4 பேர் உடல்கள் பத்திரமாக மேலே கொண்டு வருவதற்கு உதவினார்.

இதையொட்டி மரிய மைக்கேலை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரில் வரவழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்