தூத்துக்குடி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்று
கராத்தே மற்றும் சிலம்பு போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
சாயர்புரம் போப் கல்லூரியில் 4-வது மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பு போட்டி நடந்தது. இதில் தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வேலவன் வித்யாலயா பள்ளி தாளாளர் ஆனந்த், பயிற்சியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.