திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு பாராட்டு சான்றிதழ்
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு ஆணையரகம் புதுடெல்லி மூலமாக அகில இந்திய அளவில் போட்டி நடத்தியது. மாவட்டத்தில் பாதுகாப்பான மற்றும் சுகாதார உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் திருச்சியும் தேர்வானது. இதில் பல செயல்பாடுகளின் அடிப்படையில் உணவு வணிகர்களுக்கு சுகாதார சான்று அளிப்பது, உணவு மாதிரிகள் ஆய்வுக்கு எடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதையொட்டி உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி புதுடெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் எல் மாண்டவியா மற்றும் மத்திய மந்திரி எஸ்பி. சிங் பாகேள் பாராட்டு சான்றிதழை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபுவிடம் வழங்கினார். இந்த சான்றிதழை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் கொடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வாழ்த்து பெற்றனர்.