ராணிப்பேட்டையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் கலவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஸ்ரீதேவிக்கு, கலெக்டர் வளர்மதி சிறந்த சேவைக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பாராட்டு சான்றிதழ் பெற்ற ஸ்ரீதேவிக்கு மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விஜயாமுரளி, கலவை மருத்துவ அலுவலர் டாக்டர் வெண்ணிலா, மருத்துவக் குழு தலைவர் தியாகராஜன், டாக்டர் சதீஷ்குமார் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து, சால்வை அணிவித்தனர்.